”கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போட அனுமதிக்கலாம்” -மத்திய சுகாதாரத்துறை

0 2343

ர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மூலமாகத் தாயையும் குழந்தையையும் பாதுகாக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசிப் போடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக தேசிய அளவில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான இயக்கம் வேகம் எடுத்துள்ளது.

தாய்மைப் பேறு உறுதி செய்யப்பட்ட பெண்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்து விட்டு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் எனறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments