மேற்கு வங்க சட்டமன்றத்தில் கடும் அமளி; பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு..!

0 2431

மேற்கு வங்க சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேற்கு வங்காள புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ஜெகதீப் தங்கார் உரையுடன் தொடங்கியது.. அப்போது வன்முறைக்கு திரிணாமூல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments