கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலையளிப்பதாக நிபுணர்கள் கருத்து

0 4588

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் கவலையளிக்கும் வண்ணம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் தினசரி சராசரியாக 11 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தொற்று காரணமாக சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை நாட்டின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 20 சதவீதமாகும்.

இதன் காரணமாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடும் கர்நாடகாவும் கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணம் கண்டறியப்படவில்லை. மாநிலத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையில் சுமார் 11 சதவீதம் மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாகக் செரோ சர்வே ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

கேரளத்தின் பத்தனம்திட்டா மற்றும் பாலக்காட்டின் மூன்று கிராமங்களில் டெல்டா வைரஸ் பரவியிருப்பதும் கவலையே ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தப் பகுதிகளில் மும்மடங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments