பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு..! விலை உயர்வு, பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை

0 2571

நாட்டில் அனைத்து வகையான பருப்புகளை இருப்பு வைப்பதற்கான உச்ச அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

பெட்ரோல்- டீசல் விலை அதிகரிப்பு காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பருப்பு விலை மேலும் உயர்வதை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் வரும் அக்டோபர் மாதம் வரை பாசிப்பருப்பு தவிர மற்ற அனைத்து வகை பருப்புகளையும் இருப்பு வைக்க மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதன்படி, மொத்த விற்பனையாளர்கள் 200 டன் பருப்புக்கு மேல் இருப்பு வைக்க கூடாது. சில்லரை வியாபாரிகள் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது.

ஆலை உரிமையாளர்கள் கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆண்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு மேல் இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments