ஒரு மின்விசிறி - ஒரு பல்பு மட்டுமே பயன்படுத்தும் சிறிய வீட்டிற்க்கு ரூ. 2.5 லட்சம் மின்கட்டணமா..? ஷாக்கான மூதாட்டி..!

0 3151

மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கும் 65 வயது மூதாட்டிக்கு இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் செய்வதறியாது அவர் திகைக்துப்போய் உள்ளார்.

குணா மாவட்டத்தில் வசித்து வருபவர் Rambai Prajapati. வீட்டு வேலை செய்து வரும் இவர் வீட்டில் ஒரு மின்விசிறியும் ஒரு குண்டு பல்புமே மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் உள்ளார்.

வழக்கமாக 500 ரூபாய்க்குள் கட்டணம் வரும் நிலையில், லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்ததால் அது தொடர்பாக முறையிட மின்வாரிய அதிகாரிகளை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் பல நாட்களாக முயற்சித்த போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை என  புகார் கூறும் அவர், இது குறித்து மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தபோதும் தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments