திரைப்பட ஒளிப்பதிவு மசோதாவுக்கு எதிராக திரையுலகினர் போர்க்கொடி..! கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரும் எதிர்ப்பு

0 5993

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டபோது எதிர்ப்பு எழுந்ததால் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தச் சட்டத்தின்படி ஒருமுறை தணிக்கைக்கு ஆளான படங்களை மறு தணிக்கை செய்யுமாறு கோர முடியும். மேலும் திரைப்பட கதைத் திருட்டு போன்றவற்றுக்காக கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

இந்த புதிய வரைவு மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்டோர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments