தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எவற்றிற்கெல்லாம் அனுமதி கிடையாது

0 4980
தமிழ்நாட்டில் எவற்றிற்கெல்லாம் அனுமதி கிடையாது

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மாநிலங்களுக்கு இடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கும், தியேட்டர்கள் திறக்கவும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தியேட்டர்கள், மது பார்கள்,நீச்சல் குளங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட வன பூங்காக்களைத் திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி தரப்படவில்லை.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கும் இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களில் நுழைவு வாயிலில் சானிடைசர் அவசியம் என்றும் கடைகளுக்கு வருவோரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும்,அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மாஸ்க், தனிநபர் இடைவெளி உள்ளிட்டவற்றை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments