தமிழ்நாட்டில் இன்று 4,952 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

0 3753
தமிழ்நாட்டில் இன்று 4,952 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 4 ஆயிரத்து 230 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 486 ஆக சரிந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 90 வயது தஞ்சாவூர் முதியவர் மற்றும் மூதாட்டி உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், 4 ஆயிரத்து 952 பேர், ஒரே நாளில் வீடு திரும்பி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments