புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதி - யூடியூப் உள்ளிட்டவற்றில் இருந்து 59,350 லிங்குகளை நீக்கியது கூகுள்

0 3976
யூடியூப் உள்ளிட்டவற்றில் இருந்து 59,350 லிங்குகளை நீக்கியது கூகுள்

கூகுள் நிறுவனம், யூடியூப் உள்ளிட்ட தனது சேவைகளில் இடம்பெற்ற 59 ஆயிரத்து 350 லிங்குகளை நீக்கியுள்ளது. இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் படி, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் கருத்துக்களுக்கு வலைத்தளங்களை இயக்கும் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் புகாருக்குள்ளான தனது சேவைகளின் லிங்குகளை நீக்கத் தொடங்கியுள்ளது.ஏப்ரல் மாதத்தில் மட்டும் 27 ஆயிரத்து 716 புகார்கள் வந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை பதிப்புரிமை பற்றியவை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சமூக வலைத்தளமான கூ ஆயிரத்து 253 பதிவுகளை நீக்கியுள்ளது. நாலாயிரத்து 249 பதிவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments