முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

0 2405
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ய வைத்ததாக துணை நடிகை அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புகார் அளித்த பெண்ணுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச பயன்படுத்திய செல்போன் மதுரையில் அவரின் இல்லத்தில் இருப்பதால் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்ற காவல்துறையின் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற மணிகண்டன் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு அனைத்து மகளிர் காவல்துறைக்கு அனுமதி அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments