விரைவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் : தானே ஸ்கூட்டரை ஓட்டி வீடியோவாக வெளியிட்டார் ஓலா சிஇஓ

0 11308

விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால், பெங்களூரு சாலைகளில், புதிய ஓலா ஸ்கூட்டரை ஓட்டி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

60 கிலோமீட்டர் வேகத்தை மிக விரைவாக எட்டும் திறன், சீட்டுக்கடியில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவிற்கு இடம், கழற்றக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரி, அலாய் வீல்கள்  உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்துகொண்டால், 100 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments