வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

0 4061
வன்னியர்களுக்கான பத்தரை சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வன்னியர்களுக்கான பத்தரை சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கணக்கீடு இல்லாமல் பத்தரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை முழுமையாக விசாரித்து, தமிழக அரசின் கருத்தையும் அறிந்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments