ZyCoV-D தடுப்பு மருந்தை உடலில் செலுத்த ஊசி தேவையில்லை ; தோலில் உள்ள நுண்துளைகள் வழியாக செலுத்தப்படும்

0 3852
ZyCoV-D தடுப்பு மருந்தை உடலில் செலுத்த ஊசி தேவையில்லை

புதிதாக அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை.

ஊசி போட்டுக் கொள்வதென்றாலே பலருக்கு, குறிப்பாக சிறார்களுக்கு பயம்தான். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும்கூட சிலர் தயங்குவதற்கு இது காரணமாக உள்ளது.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த சைடஸ் கெடில்லா நிறுவனம், ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து, 3 கட்ட பரிசோதனைக்குப் பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

3 டோஸ் போட்டுக் கொள்ளும் இந்த தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட்டால், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை.

ஊசிக்கு பதிலாக, ஸ்பிரிங்-பவர் கருவி மூலம், தோலில் உள்ள நுண்துளைகள் வழியாக தடுப்பு மருந்து செலுத்தப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments