கொரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களுக்கு விரைந்தது மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழுக்கள்

0 2570
கொரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களுக்கு விரைந்தது மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழுக்கள்

கொரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கேரளம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காகப் பொதுசுகாதார வல்லுநர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுக்களை இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மாநிலங்கள் எதிர்கொண்டுள்ள சவால்களைப் புரிந்து கொண்டு, சிக்கல்களைக் களையவும், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தக் குழுவினர் உதவுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments