தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையிலான பாலங்கள் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

0 3805
தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையிலான பாலங்கள் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

ராணுவ வீரர்கள் தேவையான இடங்களில் உடனடியாகப் பயன்படுத்துவதற்கான 12 உலோகப் பாலங்கள், ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளில், வழியில் குறுக்கிடும் ஆறுகள், கால்வாய்கள் போன்ற இடையூறுகளை தாண்டி படைகள் முன்னேறிச் செல்ல இந்த பால அமைப்புகள் உதவும்.

தேவையான இடத்தில் உடனடியாக பாலமாக இவற்றை அமைத்து படைகள் முன்னேறிச் செல்லும். 10 மீட்டர் நீளம் கொண்ட இந்த உடனடிப் பாலங்கள், 70 டன் வரை எடை கொண்ட டாங்குகள் சென்றாலும் தாங்கும்.

DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் வடிவமைப்பில், எல் அண்டு டி நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது.

அந்த வகையில் 492 கோடி ரூபாய் செலவில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 பால அமைப்புகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன.

ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே கொடியசைத்து இணைத்து வைத்தார். இந்த நிகழ்வில் டிஆர்டிஓ தலைவர் சத்தீஷ் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments