கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0 3754
கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் மதுரை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில்,  ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments