அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுடன் விண்வெளிக்கு பயணம் செய்யும் 82 வயது மூதாட்டி..!

0 4464
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுடன் விண்வெளிக்கு பயணம் செய்யும் 82 வயது மூதாட்டி..!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுடன் (Jeff Bezos) 82 வயதான மூதாட்டி விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஜெப் பெசோசின் ராக்கெட் நிறுவனமான புளூ ஆரிஜின், நியூ செப்பர்டு என்ற விண்கலத்தை ஜூலை 20ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளது.

இதில் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது தம்பி மார்க்குடன் 82 வயதான பெண் விமானி வாலி ஃபங்க் (Wally Funk)என்பவரும் செல்லவுள்ளார்.

இதன்மூலம் விண்வெளிக்கு பயணம் செய்யும் மிக வயதான நபர் என்ற பெருமையை வாலி பெறுகிறார். இவர் 1961 முதல் 1963ஆம் ஆண்டுவரை நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments