தடுப்பூசி போட்டுக்கொள்ள வாருங்கள்... வீடு வீடாகச் சென்று வெற்றிலைப் பாக்கு வைத்து மக்களை அழைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்

0 5821

ராணிப்பேட்டை மாவட்டம் அரங்காபுரம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைப் பாக்கு வைத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரனும் எய்டு இந்தியா என்ற தனியார் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை அழைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments