தமிழ்நாட்டிற்கு மேலும் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

0 3004
தமிழ்நாட்டிற்கு மேலும் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

நேற்று புனேவில் இருந்து நேற்று 10 லட்சத்து 8000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

ஜுலை மாதம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள்  அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று ஒரே நாளில் முதல் தவணையாக 4 லட்சத்து 8 ஆயிரம் தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையாக 6 லட்சம் தடுப்பூசிகளும் சென்னை வந்து சேர்ந்தது.

அவை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து சென்னையிலும் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments