ஆபாச படத்தால் சிறுமியை கொன்ற 17 வயது காமுகன்…!

0 7485
ஆபாச படத்தால் சிறுமியை கொன்ற 17 வயது காமுகன்…!

ஸ்மார்ட் போனில் ஆபாசபடம் பார்ப்பதை வழக்கமாக்கிய 17 வயது சிறுவன் , தங்கள் பகுதியை சேர்ந்த 11 வயது மாணவியை அழைத்துச்சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில் 11 வயது பள்ளிச்சிறுமி ஒருவர் மாயமானார். அவரை காணாமல் பெற்றோர் உற்றார் உறவினர்கள் எல்லாம் பல இடங்களில் தேடிவந்த நிலையில் அங்குள்ள ஒதுக்கு புறமான காட்டுப்பகுதியில் காயங்களுடன் அந்த சிறுமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் அந்த சிறுமியியுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்ட 17 வயது ஐ.டி.ஐ மாணவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதோடு, தனக்கும் சிறுமிக்கும் சம்பந்தமில்லை என்பது போல அந்த சிறுவன் மறுத்துள்ளான்.

ஆனால் அந்த சிறுமி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலும், அந்த சிறுவன் கையில் இருந்த செல்போனும் ஒன்று என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர். சிறுவனை தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சிறுமியை கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான்.

எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்த விசாரணையை முன்னெடுத்த போலீசார், சிறுவன் கூறிய காரணத்தை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் பயன்படுத்திய ஸ்மார்ட் போனை வாங்கி ஆய்வு செய்த போது அவன் ஏராளமான ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஆபாச இணையதளங்களை தேடி தேடிச் சென்று, மணிக்கணக்கில் அவன் ஆபாச படங்களைப் பார்த்து வந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவனிடம் இது தொடர்பாக போலீசார் கேட்ட போது, ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையானதால், அதில் வருவது போல  விபரீத ஆசை அவனுக்கு தோன்றியுள்ளது. தனியாக வந்த சிறுமியை பார்த்ததும், பேசுவது போல நடித்து சிறுமியை காட்டுப்பாகுதிக்கு தூக்கிச்சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு வைத்து சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு அந்த சிறுமி தனது தாயிடம் கூறுவதாக சொன்னதால் அந்த சிறுமியின் தலையில், அந்த சிறுவன் கல்லால் தாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த சிறுமி உயிருக்கு போராடிய நேரத்தில் மிருகமான அந்த சிறுவன் அந்த சிறுமியை உடலில் பல இடங்களில் கடித்து வைத்து கொடூரமாக நடந்து கொண்ட அதிர்ச்சி தகவலும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கொலை வழக்கு மட்டும் பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளனர். அவன் மீது போக்சோ வழக்கிலும் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சிறுமியின் பிணக்கூறாய்வுக்கு பின்னர் தான் அந்த சிறுவன் செய்த கொடூர சேட்டைகள் ஆதாராப்பூர்வமாக தெரியவரும் என்பதால், அப்போது கூடுதல் சட்டபிரிவுகள் அதில் சேர்க்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

கொலை வழக்கில் சிக்கியுள்ள சிறுவனுக்கு பெற்றோர் கிடையாது என்பதால், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்ததால் செல்லம் காரணமாக ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்துக் கொண்டு அதன் மூலம் ஆபாச படங்களை பார்த்து சீரழிந்து, தற்போதை கொலைக்காரனாகி கம்பி எண்ணி வருகின்றான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப்பகுதி மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஆபாச படத்துக்கு மட்டுமல்ல, கஞ்சாவுக்கும் அடிமையானவன் என்றும், கஞ்சாவிற்பனையை தடுக்க காவல்துறையினர் தவறியதால் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவதாக குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments