புலிக்கே விபூதி அடித்த வாத்து..! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

0 5867

ரு சிறிய நீர்தேக்கத்தில் வாத்து ஒன்று புலியிடம் சிக்காமல் டிமிக்கி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சிறிய நீர்தேக்கத்தில் நீந்திசெல்லும் வாத்தை பிடிக்க புலி ஒன்று முயல்வதும், அந்த புலியிடம் அகப்படாமல் இருக்க தண்ணீருக்குள் மூழ்கி வாத்து தப்பி செல்வதும் பதிவாகியுள்ளது.

வியாபாரத்தில் விரைந்து முடிவெடுத்து செயலாற்றக்கூடிய சிறிய நிறுவனமாக இருப்பதின் பயன் இதுதான் என்றும் இதனால் தான் புது வர்த்தக வாய்ப்புகளை அடைவதற்காக சிறிய நிறுவனங்களை கைப்பற்றுவதில் பெரு நிறுவனங்கள் அக்கறை காட்டுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments