மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்க்க ஒப்புதல்

0 6613
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்க்க ஒப்புதல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்த்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் அவர்களை சேர்ப்பது குறித்து ஆராயப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாததால், மத்திய அரசின் நிபந்தனைப்படி, புதுச்சேரியில் தமிழ்நாடு மாணவர்களை சேர்ப்பதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் பொருத்தமாக இருக்காது என்று கூறினார்.

முன்னதாக, பசுமை சைதை திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்கவிழவை சென்னை சைதாப்பேட்டை வ.வூ.சி தெருவில், இன்று பிறந்தநாள் காணும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments