தமிழ்நாட்டில் மேலும் 4,481 பேருக்கு கொரோனா உறுதி; 5,044 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 4101

மிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 4 ஆயிரத்து 481 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 498 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 249 பேர், தஞ்சாவூரில் 248 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், 5 ஆயிரத்து 44 பேர், ஒரே நாளில் வீடு திரும்பி உள்ளனர்.

19 வயது சிவகங்கை இளம்பெண், 25 வயது தஞ்சாவூர் இளம்பெண் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments