சிறையில் உயிரிழந்த கைதி முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 2907
சிறையில் உயிரிழந்த கைதி முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த கைதி முத்து மனோ குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 22ஆம் தேதி சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறைச்சாலை பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த கைதி முத்து மனோ குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments