சீனாவிடம் வம்பு வைத்துக் கொண்டால் மண்டை உடையும் ; சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை

0 4840
சீனாவிடம் வம்பு வைத்துக் கொண்டால் மண்டை உடையும் ; சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை

சீனாவிடம் வம்பு வைத்துக் கொண்டால், மண்டை உடைபட நேரிடும் என எதிரிநாடுகளை, சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தலைநகர் பெய்ஜிங்கில், தியானன்மென் சதுக்கத்தில் உரையாற்றிய அதிபர் ஜின்பிங், சீனாவை அவமதிக்கவோ நிர்ப்பந்திக்கவோ முயன்றால், உருக்கால் ஆன மாபெரும் சுவருடன் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும் என அவர் கூறினார்.

சீன ராணுவத்தின் வலிமையை பெருக்கவும், தைவானை சீனாவுடன் மீண்டும் ஒருங்கிணைக்கவும் உறுதிபூண்டிருப்பதாகவும், ஜின்பிங் குறிப்பிட்டார். சீனாவில் புரட்சி நடத்திய கம்யூனிச தலைவர் மா-சே-துங் பாணியில் உடையணிந்திருந்த ஜின் பிங், ஹாங்காங் நிலவரதைப் பொறுத்தவரை சீனாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும் அதேநேரத்தில் சுமூக அமைதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments