ஐ.ஓ.பி வங்கிக்கு கட்ட வேண்டியது ரூ.50.16 கோடி... ஒரே செட்டில்மென்டில் 29 கோடி செலுத்தியது சக்தி சுகர்ஸ்... 21 கோடி தள்ளுபடி..!

0 38074

சுமார் 50.16 கோடி கடனுக்கு பதிலாக ஒரே சமயத்தில் 29 கோடி ரூபாய் கொடுத்து இந்தியன் ஓவர்சிஸ் வங்கியிலுள்ள தன் கடனை சக்தி சுகர்ஸ் நிறுவனம் தீர்த்துள்ளது.

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சக்தி சுகர்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தில் 3 ஒடிசாவில் ஒன்று என 4 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் கடன் வாங்கியிருந்தது . 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின்படி, சக்தி சுகர்ஸ் நிறுவனம் முதலும் வட்டியுமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 50.16 கோடி செலுத்த வேண்டும். ஒன் டைம் செட்டில்மென்டாக 29 கோடி செலுத்தினால் மீதி பணத்தை தள்ளுபடி செய்து கொள்ள முடியும். இதனால், ஜூன் 29 ஆம் தேதி சக்தி சுகர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 28.90 கோடி கொடுத்து கடனை தீர்த்துள்ளது.

தொடர்ந்து, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கொடுத்த புகாரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாபஸ் பெற்றுள்ளது. OTS எனப்படும் ஒரே டைம் செட்டில்மென்ட்டாக சாமானியன் கடன் கட்டி முடித்தால் CIBIL ஸ்கோர் குறைந்து மீண்டும் எந்த வங்கியிலும் கடன் வாங்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். CBIL ஸ்கோர் என்பது சாதாரண மக்களுக்கு மட்டும்தானா அல்லது பெரும் நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்கிற கேள்வியும் இந்த சூழலில் எழுகிறது.

இது குறித்து, வங்கி துறை சார்ந்த நிபுணர்கிளடத் விசாரித்த போது, சாதாரண மனிதர்கள் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்தால், சிபில் பாதிக்கப்படுவது போல நிறுவனங்களின் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும். ஒன்டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் வங்கியும், வாடிக்கையாளரும் ஒரு வித சமரசத்தை எட்டுவதுதான் இதன் நோக்கம்.

இதனால், சக்தி சுகர்ஸ் நிறுவனம் மீதியுள்ள 21 கோடியை கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இனிமேல் பிற வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாது. அதே வேளையில்,தனியார் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. இதனால், தனிநபர்கள் பாதிக்கப்படுவது போல பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படாது என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments