”அழகாக இல்லை; என்னிடம் யாரும் பேசுவதில்லை” -உயிரை மாய்த்த மாணவனால் கதறி துடித்த பெற்றோர்

0 16916

கும்பகோணத்தில் அழகாக இல்லை என்பதால், இளம் பெண்கள் தன்னுடன் பேசுவதிலை என்கிற விரக்தியில் இருந்த மாணவன், தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் அடுத்த பணகுடம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு பூவேந்தன் என்ற மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பூவேந்தன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். தான் அழகாக இல்லாத காரணத்தினால், தன்னுடன் இளம் பெண்கள் யாரும் பேசுவதில்லை என்று தன் நண்பர்களிடத்தில அடிக்கடி கூறி பூவேந்தன் வருத்தமடைந்துள்ளான்.

இதனால், தாழ்வுமனப்பான்மையும் மாணவனிடத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகத்தின் அழகை விட அகத்தின் அழகுதான் உயர்ந்தது என்பதை மாணவனுக்கு விளக்கி கூற வேண்டுமென்றும் இளவயதான அவனின் நண்பர்களுக்கு தெரியவில்லை. பதின்பருவ குழப்பத்தில் மாணவன் இருந்துள்ளான்.

இந்த நிலையில், பணகுடம் சுடுகாட்டு பகுதியில் உள்ள மரத்தில் மாணவன் பூவேந்தன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்த சோழபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூவேந்தனின் பெற்றோர், ‘ஒரே மகனின் உடலை பார்த்து கதறியது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. பூவேந்தன் குறித்து அவனின் நண்பர்களிடத்தில் போலீசார் விசாரித்த போது, தான் அழகாக இல்லையே என்று அடிக்கடி கூறுவான் என்று தெரிவித்துள்ளனார். அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாணவன் தற்கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments