விரைவில் வருகிறது அப்டேட்..! வலிமை அப்டேட் குறித்து வெளியானது புதிய அப்டேட்?

0 7068

டிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் இம்மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படபிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இன்னும் சில சண்டை காட்சிகள் மட்டுமே படமாக்கப் படவேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வலிமை அப்டேட் கேட்டு தினந்தோறும் ட்விட்டரில் வலியுறுத்தி வரும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவை இரண்டையும் இந்த மாதத்தில் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments