மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல், மத்திய மாநில அரசுகள் தான் தடுக்க முடியும்-

0 2668
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும்

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகிய மின்னணு சாதனங்களில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

படிப்பு மற்றும் விளையாட்டுக்காக அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து 8 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments