தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

0 5027

வரும்5ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளநிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கூட்டத்துக்கு பின் கட்டுப்பாடுகள் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் துணிக்கடைகள் திறப்பு, பொது போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments