முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் நண்பர் எனக்கூறி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி

0 3060

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் நண்பர் எனக்கூறி கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த சத்யநாராயணன், கடந்த ஆட்சியின்போது, செல்லூர் ராஜூவிற்கு நெருக்கமானவர் என கூறி கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கி தருவதாக 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தலா 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக புகார் கூறப்படுகிறது.

சம்மந்தப்பட்டவர்களை செல்லூர் ராஜூ அலுவலகம் வரை அழைத்து செல்வது, ஆனால் சத்யநாராயணன் மட்டும் உள்ளே சென்றுவிட்டு வந்து, வேலை உறுதியாகிவிட்டதாக கூறுவது என ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நியமன ஆணை எனக் கூறி போலி ஆவணங்களை வழங்கியதாகவும், கொடுத்த பணத்தை திரும்பத் தர மறுத்துவிட்டதோடு, போலீசுக்கு சென்றபோது சத்யநாராயணன் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments