மாணவிகளின் கால் மீது கால் உரசி வம்பு... திருச்சி பிஷப் ஹீபர் மன்மத எச்.ஓ.டி நீக்கம்..!

0 7296
மாணவிகளின் கால் மீது கால் உரசி வம்பு... திருச்சி பிஷப் ஹீபர் மன்மத எச்.ஓ.டி நீக்கம்..!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டமேற்படிப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை மேக்கப் போட்டுக் கொண்டு தன்னை பார்க்க வருமாறு அழைந்தவரை பேக்கப் செய்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் ஒன்று புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி. CSI தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தமிழ்த்துறையின் எச்.ஓ.டியாக பொறுப்பு வகித்து வந்தவர் பேராசிரியர் பால் சந்திர மோகன். இவர் தன்னிடம் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவரும் தமிழ்த்துறையின் பட்டமேற்படிப்பு மாணவிகளிடம் தொடர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில் பால் சந்திர மோகனின் பாலியல் விளையாட்டு குறித்தும், அவர் நடந்து கொள்ளும் ஆபாசமான முறை குறித்தும் விரிவான புகாராக எழுதி 5 மாணவிகள் கையெழுத்திட்டு கல்லூரி முதல்வருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பிவைத்தனர். அதில், பால் சந்திரமோகன், வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது, தங்கள் கால்களோடு உரசிக்கொண்டே நெருக்கம் காட்டுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டதாகவும், அவரது அறைக்கு தனியாக செல்லும் மாணவிகளின் முன்னிலையில் சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த ஆபாச சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்ததாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தனது அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துவதாகவும் , அப்படி செல்லும் மாணவிகளிடம் நல்ல அழகா மேக்கப் போட்டு வரதெரியாது, என் வீட்டு வேலைக்காரி கூட சும்மா பவுடர் எல்லாம் போட்டு ஜம்முன்னு இருப்பா என்று வசைபாடியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களது நிலை குறித்து
அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நளினி சுந்தரியிடம் தெரிவித்தால், அவரும் HOD யை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொடர் பாலியல் தொல்லையால் பாதுகாப்பின்மையை உணர்வதால் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அந்த மாணவிகள் வேதனையோடு தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவைத்திருந்த நிலையில் பத்மசேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்தால் விவகாரம் பெரிதாகிவிடும் என்று அஞ்சிய கல்லூரி நிர்வாகம், மாணவிகளின் புகாரை விசாரிக்க வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட உள் விசாரணை குழுவை அமைத்தது.

இந்த விசாரணை குழுவானது, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியை நளினி சுந்தரியிடமும், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த ஐந்து மாணவிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் எச்.ஓ.டி பால் சந்திர மோகன் , அனைத்து பாலியல் அத்துமீறல்களும் உறுதியானதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பால் சந்திர மோகன் மற்றும் நளினி சுந்தரி மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை அறிக்கை கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி புகாருக்கு உள்ளான பால் சந்திரமோகனை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. எச்.ஓ.டிக்கு ஆதரவாக செயல்பட்ட உதவி பேராசிரியை நளினி சுந்தரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தினால் காமுக எச்.ஓ.டி பால் சந்திரமோகனால், எத்தனை மாணவிகளின் வாழக்கை பாழாகியுள்ளது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கல்லூரி நிர்வாகம் சட்டத்தின் படி எச்.ஓ.டி மீதான மாணவிகளின் பாலியல் புகாரை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments