வீட்டு பயன்பாட்டு மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25.50 உயர்வு

0 3223

வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 25 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், சென்னையில் 825 ரூபாய்க்கு விற்கப்பட்ட, வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 850 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது.

இதேபோல, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கான விலை 84 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து, ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments