கொரோனாவும் - ஞாபக மறதியும்..! என்ன செய்யலாம் ? எது கூடாது ?

0 7135

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சிலர் ஞாபக மறதி பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கொரோனா வைரஸ் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வைரஸ் உடலிலிருந்து நீங்கிய பிறகு, ஞாபக மறதி, உடல் பலவீனம், ஒருவகையான பதற்றம், தூக்கமின்மை, பசியின்மை போன்ற அடுத்த கட்ட திடீர் பிரச்னைகளும், நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுவதாக குணமடைந்த பலர் கூறி வருகின்றனர். இதில் ஞாபகமறதி என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், படிப்படியாக மூளையின் மண்டலத்தில், சிந்திக்கும் ஆற்றல் குறைந்து குணப்படுத்தக்கூடிய அளவிலான சிறிய மாற்றம் காணமுடியும் என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அண்மைகால சம்பவம் மறந்து போகுதல், நண்பர்களின் பெயர், ஊர், மறந்து போகுதல், புதிய சூழலை சந்திக்கும் போது குழப்பம் ஆகிய பாதிப்பால், சிகிச்சைக்காக ஒருசிலர் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர் என்கிறார், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் லட்சுமி நரசிம்மன்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பதட்டமடைந்தாலோ, உணர்ச்சி வசப்பட்டாலோ, மூளையில் சுரக்கும் இரசாயனங்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மூளையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் போது, ஞாபகமறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நல்ல தூக்கம் அவசியம் எனக் கூறும் மருத்துவர்கள், உணர்ச்சி வசப்படுவதை முற்றிலுமாக தவிர்த்து, மூச்சு பயிற்சி, தியானம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதலும் அவசியம் என்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments