தெருவில் நின்றிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போதை ஆசாமி

0 2054

சென்னை தேனாம்பேட்டையில் தெருவில் நின்றிருந்தவர்கள் மீது கத்தியுடன் வந்த போதை ஆசாமி நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

அங்குள்ள தாமஸ் சாலையில் நேற்றிரவு திடீரென மின் தடை ஏற்பட்டதால், அப்பகுதியினர் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக போதை ஆசாமி ஒருவன் கூச்சலிட்டுக்கொண்டே வந்துள்ளான். அவனைத் தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு சுற்றி இருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளான்.

இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். தறிகெட்டு ஓடிய அந்த நபரை, அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கியதில் அவனும் காயமடைந்தான். விசாரணையில் அந்த நபர், தேனாம்பேட்டையைச் சேர்ந்த நீலமேகம் என்பதும் பிரபல ரௌடியின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments