அமெரிக்கா, கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 3987

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் மட்டும் நேற்று 134 பேர் உயிரிழந்ததாகவும் இந்த மரணங்கள் பருவநிலை தொடர்பானவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.பல்வேறு மாநகராட்சிகளில் இருந்து இன்னும் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றுஅஞ்சப்படுகிறது.

கனடாவில் வெப்ப நிலை அதிகமாகக் காணப்பட்ட நிலையில் வழக்கமாகத் தகித்திருக்கும் துபாய் கூட குளிர்ச்சியான பிரதேசம் என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. வெக்கை தாளாமல் மக்கள் திடீர் திடீர் என சாலைகளில் மயங்கி விழுவதும் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சியும் காணப்படுகிறது. பருவநிலை மாறுதல் காரணமாக வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட மாறுதல்களே இந்த நிலைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments