தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று உரை

0 2210

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி இந்திய மருத்துவ கழகத்தின் நிகழ்ச்சியில் உரை  நிகழ்த்த உள்ளார்.

இதில் மருத்துவர்களின் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் மோடி அணுகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தமது டிவிட்டர் பதிவில் கோவிட் நோய்க்கு எதிராக அயராதுப் போராடி வரும் மருத்துவர்களின் சேவையால் இந்தியா பெருமைப்படுவதாக மோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்துள்ளார். பிரபல மருத்துவர் பி.சி.ராய் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடந்த 1991 ஆம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மருத்துவர்களின் சேவைகள் போற்றப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments