ஒன்றரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் நவீன முக கவசம்

0 4800
ஒன்றரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் நவீன முக கவசம்

ஒன்றரை மணி நேரத்தில் கொரோனா வைரசை கண்டறியக் கூடிய வகையில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேச்சர்  பயோடெக்னாலஜி அறிவியல்  இதழில் வெளியான கட்டுரையில், பிரெஞ்சு விஞ்ஞானிகள் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முக கவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து தகவல் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  இதனை அடுத்து முக கவசம் அணிந்தவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments