பாம்பன் தூக்குப்பாலம் வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து - பயணிகள் அவதி

0 2128
பாம்பன் தூக்குப்பாலம் வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து - பயணிகள் அவதி

பாம்பன் பாலத்தில் ஏற்பட்டதொழில்நுட்பக் கோளாறு எதிரொலியாக கடைசி நேரத்தில் ரயில்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பாம்பன் தூக்குபாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் நேற்று காலை பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து சென்ற போது அங்கு பொருத்தப்பட்டுள்ள சென்சாரில் இருந்து அபாய ஒலி ஒலித்தது.

இதனால் மீண்டும் பாம்பன் தூக்கு பாலம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக கோவை செல்லும் வாராந்திர ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments