தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இயல்பைவிட 21 சதவீதம் கூடுதல் மழை

0 1775

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூன் மாதம் இயல்பை விட 21 விழுக்காடு மழை அதிகமாக பெய்துள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூன் முதல் வாரத்தில்  வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் திசைவேக மாறுபாடு, வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது வாரத்தின் இறுதியில் நிலவிய வலுவான மேற்கு மற்றும் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதன்படி ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பதிவாகும் 51.5 மில்லி மீட்டர் மழைப்பொழிவைத் தாண்டி, இந்த ஆண்டு 62.3 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments