ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காத்து வரும் மருத்துவர்கள்: தேசிய மருத்துவர்கள் தினம்

0 2035

தேசிய மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காத்து வரும் மருத்துவர்களின் சேவையை நினைவு கூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு

உலகில் கடவுளுக்கு இணையாகப் போற்றப்படுவோர் மருத்துவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய் என்ற மருத்துவர் பிறந்த ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் சாதாரண மக்களின் ஆயுட்காலம் 69 முதல் 72 வயது என்றால், அவர்களது உயிரைக் காக்கும் மருத்துவர்களின் ஆயுட்காலமோ 55 முதல் 59 ஆண்டுகள் என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் ஆய்வு முடிவு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவம் சார்ந்த ஊழியர்களும் சந்தித்து வரும் சவால்களோ ஏராளம். சளைக்காமல் மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் நன்றி சொல்வது, அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தான். அவர்களுடைய ஒத்துழைப்பு இருப்பதால் தான் தங்களது பணிகளை சுணக்கம் இன்றி செய்ய முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு, அதைப் பின்பற்றுவதுதான், அவர்களுக்கு நாம் செய்யும் சேவையாக இருக்க முடியும். தன்னலம் பாராமல், சகிப்பு தன்மையோடு வீர நடை போடும் மருத்துவர்களை நாமும் போற்றுவோம்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கு கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதே இந்நாளில் நமக்கு மருத்துவர்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments