தமிழ்நாட்டில் மேலும் 4506 பேருக்கு புதிதாக கொரோனா.. 113 பேர் பலி..!

0 5345

மிழ்நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு, கணிசமாக குறைந்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில், 4 ஆயிரத்து 506 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 514 பேரும்.ஈரோட்டில் 420 பேரும், திருப்பூரில் 270 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னையை பொறுத்தவரை, மேலும் 257 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், 5 ஆயிரத்து 537 பேர், ஒரே நாளில் வீடு திரும்பி உள்ளனர்.5 மாத கோயம்புத்தூர் ஆண் குழந்தை, 96 வயது சென்னை முதியவர் உள்பட கடந்த 24மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரத்து 191 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments