பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் அறிவிப்பு

0 4869

தமிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு, குறைந்த வாடகையில் அரசு வீடு மற்றும் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் குடியிருக்க வீடு இல்லாமல் வறுமையில் வாடுவதாக செய்தி வெளியான நிலையில், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகை வீடு ஒன்றை பொது ஒதுக்கீட்டின் கீழ் வழங்க உத்தரவிட்ட மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்க ஆணை பிறப்பித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments