கோவாவில் BSNL நிறுவன இணைய சேவைகள் மிகவும் மந்தமாக இருப்பதை கண்டித்து கிராமப்புற மாணவர்கள் போராட்டம்

0 1948
கோவாவில் BSNL நிறுவன இணைய சேவைகள் மிகவும் மந்தமாக இருப்பதை கண்டித்து கிராமப்புற மாணவர்கள் போராட்டம்

கோவாவில் BSNL நிறுவன இணைய சேவைகள் மிகவும் மந்தமாக இருப்பதை கண்டித்து கிராமப்புற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sattari பகுதியில் உள்ள 3 கிராமங்களில் BSNL இணைய சேவைகள் மிகவும் மோசமாக உள்ளதால், மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில மாணவர்கள் இணைய சேவைகளுக்காக டவர் கிடைக்கும் இடங்களைத் தேடி 15 கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை புகாரளிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வல்போயில் உள்ள BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டனர். BSNL ஊழியர்களே Jio இணைய சேவைகளைத் தான் பயன்படுத்துவதாக  மாணவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments