கோயில் வாசலில் மாமியாரை விட்டு சென்ற மருமகள் - 3 தினங்களாக உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய ஆட்டோ ஒட்டுனர்கள்

0 23058
கோயில் வாசலில் மாமியாரை விட்டு சென்ற மருமகள் - 3 தினங்களாக உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய ஆட்டோ ஒட்டுனர்கள்

கும்பகோணத்தில் கோயில் வாசலில் மாமியாரை விட்டு சென்ற ஆந்திராவை சேர்ந்த மருமகளை போலீசார் தேடி வருகின்றனர். 

கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் வாசலில் 3 தினங்களாக மூதாட்டி ஒருவர் உணவின்றி அழுதபடி வேதனையுடன் இருந்துள்ளார். இதைக்கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், அவருக்கு உணவளித்து விசாரித்தபோது, அவர் தெலுங்கில் பேசியுள்ளார்.

இதையடுத்து தெலுங்கு தெரிந்தவர் மூலம் விசாரித்ததில் அவர் பெயர் சித்ரா என்பதும் ஆந்திராவின் ராம்லால்குடியில் உள்ள வெள்ளத்தூரை சேர்ந்தவர் என்பதும், திட்டியதால் கோபமடைந்த மருமகள் காரில் அழைத்து வந்து அவரை கும்பகோணத்தில் விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் அவரை கொண்டு போய் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments