தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 2864

தமிழகத்தில் நடக்கும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்டுவதோடு, இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூரில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனிப்பட்ட விரோதத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிப்பட்ட விரோதம் இருந்தாலும், ஆக்கிரமிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் அரசு நிலமாக இருப்பதால் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

மேலும், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments