பிரான்ஸில், செப்டம்பர் மாதம் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு ; தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தல்

0 2369
பிரான்ஸில், செப்டம்பர் மாதம் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு ; தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தல்

பிரான்ஸில், செப்டம்பர் மாதம் கொரோனா நான்காம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசகர் ஃபோண்டனெட் ( Fontanet )எச்சரித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது கொரோனா நான்காம் அலைக்கு வழி வகுக்கும் என எச்சரித்துள்ள பேராசிரியர் ஃபோண்டனெட் ( Fontanet ), 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா வைரஸின் தீவிர பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விடலாம் என்றார்.

இன்னும் 2 மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments