1 கோடி கார் தயாரித்து ஹுண்டாய் சாதனை - நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 5253
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலையில் இதுவரையில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்ய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட ஒரு கோடியாவது கார், முதலமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, ஹுண்டாய் தொழிற்சாலையில் இருந்து சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு 200 கறவை மாடுகளை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர், தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments