புதுச்சேரியில் ஊரடங்கு ஜூலை 15 வரை நீட்டிப்பு ; இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி

0 2127
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள், கோவில்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் 50 சதவீத நபர்களுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments