தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 6625
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜூலை இரண்டாம் நாள் வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 3, 4 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த இரு நாட்களில் சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments